செய்திகள்

சசிகலாவின் அண்ணன் மனைவி மரணம்

அ.தி.மு.க. அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவியும், துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனின் மாமியாருமான சந்தானலட்சுமி சென்னையில் இன்று மரணம் அடைந்தார்.

மாலை மலர்

சென்னை:

அ.தி.மு.க. அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவியும், துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனின் மாமியாருமான சந்தானலட்சுமி சென்னையில் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69.

சந்தானலட்சுமியின் உடல் வேன் மூலம் இன்று தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளை மாலை தஞ்சாவூரில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. சந்தானலட்சுமிக்கு டாக்டர் எஸ்.வெங்கடேஷ் என்ற மகனும், அனுராதா, பிரபா என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில் அனுராதவின் கணவர்தான் டி.டி.வி. தினகரன். பிரபாவின் கணவர் டாக்டர் சிவக்குமார்.

சந்தானலட்சுமி இறந்த தகவல் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.