எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் 
செய்திகள்

அதிமுக செய்தி தொடர்பாளராக வக்கீல் சசிரேகா நியமனம்

அதிமுக செய்தி தொடர்பாளராக வக்கீல் சசிரேகாவை நியமனம் செய்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளராக வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டம், பழைய வண்ணாரப்பேட்டை, ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த வக்கீல் சசிரேகா இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அ.தி.மு.க.வினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.