சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் கன்னடம் மொழி பயில விண்ணப்பித்துள்ளனர். இளவரசி சமீபத்தில் 15 நாள் பரோலில் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
அவர் பரோலில் செல்வதற்கு முன்னர் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் விண்ணப்ப நடைமுறைகள் முடிவடைந்து, இருவரும் தொலைதூர கல்வி மூலம் கன்னடம் மொழி சான்றிதழ் வகுப்பில் இணைந்து விட்டதாக பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வித்துறை இயக்குனர் மயிலரப்பா தெரிவித்துள்ளார்.