செய்திகள்

சரவணம்பட்டி அருகே புரோட்டா மாஸ்டரை கொன்ற தொழிலாளிகளுக்கு ஆயுள் தண்டனை

சரவணம்பட்டி அருகே புரோட்டா மாஸ்டரை கொன்ற தொழிலாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

கோவை:

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது35). புரோட்டா மாஸ்டர்.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சதீஸ்குமார் (25) என்பவரது மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இந்த வி‌ஷயம் சதீஸ்குமாருக்கு தெரியவரவே அவர் மூர்த்தியை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதற்காக கடந்த வருடம் ஏப்ரல் 10 -ந் தேதி சதீஸ்குமார் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (21) என்பவருடன் சேர்ந்து 4-வது வீதியில் வைத்து மூர்த்தியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை சிறப்பு வெடிகுண்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது சதீஸ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி குணசேகரன் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் கோபால கிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார்.