சென்னை:
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசின் பாதுகாப்புத்துறை எடுத்திருக்கும் கொள்கை முடிவுகளால், ஆவடியில் ராணுவ படையினருக்கான உடை தயாரிக்கும் தொழிற்சாலை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இத்தொழிற்சாலையில் தற்போது 811 பெண்கள் உட்பட, 2121 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தியாவின் முப்படை வீரர்களின் தேவைக்கேற்ற ராணுவ சின்னம் பொறிக்கப்பட்ட சீருடைகள், கூடாரங்கள், பாராசூட்கள் போன்றவற்றை, ஆண்டுக்கு சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் இத்தொழிற்சாலை தயாரித்து வருகிறது. மேலும் மத்திய ரிசர்வ் படைக்கும் தேவையான சீருடைகளையும், கஜகஸ்தான், ஐ.நா.சபை ராணுவ வீரர்கள் என வெளிநாடுகளுக்கும் சீருடைகள் தயாரித்துத் தந்திருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகம், இத்தொழிற்சாலையை மூட நினைப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
எனவே, ஆவடி ராணுவ சீருடை தயாரிக்கும் தொழிற்சாலையை மூடும் முடிவை கைவிடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Tamilnews