வழக்கு பதிவு 
செய்திகள்

சங்கராபுரம் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்ட 30 பேர் மீது வழக்கு

சங்கராபுரம் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்ட 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை அடகு வைத்த சிலரிடம் குறைந்த வட்டியும், சிலரிடம் அதிக வட்டியும் வசூலிப்பதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய பொருளாளர் ஏழுமலை தலைமையில் வாடிக்கையாளர்கள் நேற்று முன்தினம் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக ஒன்றிய பொருளாளர் ஏழுமலை உள்பட 30 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT