சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் இளைய ராஜா மகன் மாரிராஜ் (வயது25). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பாட்டத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நிழலில் நிறுத்துவதற்காக தனது பைக்கை ஓரமாக நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த தொழிலாளி தமிழன் (56) என்பவர் என் வீட்டின் முன்னால் என் அனுமதி இன்றி எப்படி பைக்கை நிறுத்தலாம் என கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த தமிழன் மாரிராஜை அடித்து உதைத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் தமிழனை கைது செய்தனர்.