சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 5-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் இசக்கிமுத்து (வயது 34). இவர்
காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி முத்துலட்சுமி (32). இவர்களுக்கு 2 மகள்கள்.
இந்தநிலையில், தம்பியின் திருமணத்திற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவிலுக்கு வந்த இசக்கிமுத்து, வீட்டுக்கு செல்லாமல்
சங்கரன்கோவில்-ராஜபாளை யம் ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார். அங்கு நேற்றுமுன்தினம் காலையில் அவர்
விஷம் குடித்தார். மேலும் இதுகுறித்து தனது மனைவியிடம் செல்போனில் கூறியுள்ளார். இதைக்கேட்டு பதறிப்போன முத்துலட்சுமி உறவினர்களுக்கு
தெரிவித்தார். இதையடுத்து விடுதியில் மயங்கிய நிலையில் கிடந்த இசக்கிமுத்து மீட்கப்பட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில்
சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.