கைது 
செய்திகள்

சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த வாலிபர் கைது

சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூரை சேர்ந்தவர் துரைராஜ் மகன் ஜெயராமன்(வயது 36). இவர் நேற்று இரவு வழக்கம்போல் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் ஜெயராஜ்(வயது 32), மதுபோதையில் ஜெயராமனின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தார்.

இதில் அவரது மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் அப்பகுதயில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் மற்றும் உளுந்து செடிபடப்புகளுக்கும் தீ வைத்தார். இதுகுறித்து ஜெயராமன் பணவடலி சத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ வைத்த ஜெயராஜை கைது செய்தனர். தீயில் எரிந்து நாசமான மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.67 ஆயிரம் ஆகும்.