ஒஹியோ:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா-சீனாவின் பெங் ஷூவாய் ஜோடி, காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில், ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸ்-உக்ரைனின் ஓல்கா சாவ்சக் ஜோடியை எதிர்த்து விளையாடியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-5 6-4 என்ற நேர்செட்களில் சானியா ஜோடி வெற்றி பெற்று காலிறுதியை உறுதி செய்தது.
காலிறுதியில் ரோமானியாவின் இரினா கேமலியா பெகு-ராலுகா ஜோடியை எதிர்கொள்கிறது. இப்போட்டி இன்று நடைபெற உள்ளது.
ஆடவர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார், அமெரிக்காவின் டொனால்ட்சனிடம் 4-6 6-2 4-6 என்ற செட்கணக்கில் தோல்வி அடைந்தார்.
ரோகன் போபண்ணா-இவான் டோடிக் ஜோடி, இரண்டாம் சுற்றில் ஜூவான் கேபல்-பேபியோ போக்னினி ஜோடியை சந்திக்க உள்ளது.