பெங்களூரில் சமீபத்தில் சமுதாயத்தில் சாதனை படைத்த பெண்களை கெளரவிக்கும் வகையில், அவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கர்நாடகா முன்னாள் டி.ஜி.பி. சங்கிலியானா கலந்துகொண்டார்.
இந்த விழாவில் டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயாவின் தாய் ஆஷா தேவிக்கு விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர், பரப்பன அக்ரஹார சிறையின் அதிகாரியாக இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவிற்கும் விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சங்கிலியானா பேசுகையில், ஆஷா தேவியின் உடலைமைப்பே இவ்வளவு கட்டுக்கோப்பாக அழகாக இருக்கிறது. அப்போது அவரது மகள் நிர்பயா எப்படி இருந்து இருப்பார்? அதேபோல் பெண்கள் பலம் உள்ள ஆண்கள் பலாத்காரம் செய்யும் போது சண்டையிடாமல் சரணடைய வேண்டும். ஆண்களிடம் சரணடைவதால் உயிர் இழப்பை தவிர்க்கலாம். அதன் பின்னர், வழக்கை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம், என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.