கபிஸ்தலம்:
கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி ,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், மற்றும் போலீசார் கபிஸ்தலம் காவல் சரகம் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அண்டகுடி காவிரி வடகரையில் மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை மறித்து சோதனை செய்தனர்.
எந்த வித அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு வருவதை கண்டு மாட்டு வண்டி ஓட்டி வந்த புளியம்பாபாடி கீழ தெருவை சேர்ந்த நடேசன் மகன் குருநாதன் வயது 49 என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் இளங்காகார்குடி காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த இரண்டு மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்ததில் அந்த மாட்டு வண்டிகளிலும் எந்தவித அரசு அனுமதியின்றி மணல் இருப்பது தெரியவந்து மாட்டு வண்டி ஓட்டி வந்த இளங்கார்குடி கீழத்தெரு பக்கிரிசாமி மகன் சுரேஷ்( வயது 35) என்பவரையும் சீனிவாசன் மகன் சுப்பையன் (40), ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் 3 மாட்டு வண்டி களையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.