மணல் கடத்தல் 
செய்திகள்

மங்களமேடு அருகே மணல் கடத்திய 5 பேர் கைது

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே அனுமதியின்றி மணல் கடத்தில் லாரியை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே அகரம்சீகூர் வெள்ளாற்று பகுதியில் சிலர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக கிராம நிர்வாக அதிகாரி மனோகரன் மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற மங்களமேடு போலீசார், அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்ட அதே ஊரை சேர்ந்த பாலுசாமி(வயது 51), ரமேஷ்(40), சக்திவேல்(21), ஜெகநாதன்(30), ரெட்டிக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த சீமான்(30) ஆகியோரை கைது செய்து பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். இதில் பாலுசாமி முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

SCROLL FOR NEXT