வழக்கு 
செய்திகள்

திருக்காட்டுப்பள்ளியில் மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு

திருக்காட்டுப்பள்ளியில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி குடமுருட்டி ஆற்றில் இருந்து அனுமதி இன்றி மணல் அள்ளப்படுவதாக திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அந்த பகுதியில் ஆய்வு செய்த போது குடமுருட்டி ஆற்றில் இருந்து அனுமதி இன்றி மணல் அள்ளி வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த விஸ்ணம்பேட்டை கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை (வயது 50) , செல்வம் (51) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.