செய்திகள்

கழுகுமலை அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்: வாலிபர் கைது

கழுகுமலை அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது திருட்டுத்தனமாக மணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.

மாலை மலர்

கழுகுமலை:

கழுகுமலை அருகே செவல்குளம் கீழ தெருவை சேர்ந்த முருகன் மகன் காளிராஜ் (வயது 23). டிராக்டர் டிரைவரான இவர் நேற்று தனது சொந்த டிராக்டரில் செவல்குளத்தில் உள்ள குளத்தில் திருட்டுத் தனமாக மணல் அள்ளி கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து வந்த குருவிகுளம் இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குளத்தில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து இன்ஸ் பெக்டர் காளியப்பன் வழக்குப்பதிந்து காளிராஜை கைது செய்து டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.