கைது 
செய்திகள்

களம்பூர் பகுதியில் மணல் கடத்திய 3 பேர் கைது

களம்பூர் பகுதியில் மணல் கடத்திய 3 பேரை கைது செய்த போலீசார் 2 மாட்டு வண்டிகள், மினி வேனை பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

ஆரணி:

களம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முனியன்குடிசை அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த முனியன்குடிசையை சேர்ந்த கார்த்தி (வயது 25), ஏரிக்குப்பம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சீனுவாசன் (36) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் வடுகசாத்து கிராமத்தை சேர்ந்த பூங்காவனம் (45), முருகன் ஆகியோர் மினி வேனில் மணல் கடத்தி வந்த போது, போலீசாரை கண்டதும் முருகன் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து போலீசார் பூங்காவனத்தை கைது செய்து, மினி வேனை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய முருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.