கைது 
செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் டிராக்டரில் மணல் கடத்தி வந்தவர் கைது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அனுமதியின்றி டிராக்டரில் மணல் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தலக்காட்டில் ஊரடங்கு உத்தரவால் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை பிடித்து விசாரணை செய்தபோது சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளிவந்தது தெரியவந்தது.

இதையடுத்து மணல் ஏற்றிவந்த டிராக்டரை பறிமுதல் செய்து டி.எஸ்.பி பழனிச்சாமி உத்தரவின் பெயரில் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மணலை கடத்திவந்த வீர சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.