செய்திகள்

லாலாபேட்டை அருகே மணல் கடத்திய 3 பேர் கைது

பஞ்சப்பட்டி ஏரியில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்ளின் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

லாலாப்பேட்டை:

லாலாப்பேட்டை அடுத்த பஞ்சப்பட்டி ஏரியில் மணல் அள்ளுவதாக லாலாபேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 3 டிராக்டர், ஒரு பொக்ளின் எந்திரம் முலம் மணல் ஏற்றி கொண்டிருந்தனர்.  

பின்னர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் நடுபட்டியைச் சேர்ந்த பரமசிவம் (வயது 34), கொட்டாம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார்(43), நாச்சாரி பட்டியைச் சேர்ந்த முருகபாண்டியன்(44)ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். 

மணல் கடத்திய 3 டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்ளின் எந்திரத்தையும் பறிமுதல் செய்யபட்டது. #tamilnews