கைது 
செய்திகள்

லாரியில் கிராவல் மண் அள்ளிய வாலிபர் கைது

லாரியில் கிராவல் மண் அள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் சப்-கலெக்டர் சினேகா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் வாகனதணிக்கை செய்தனர். அப்போது அவர்கள் டிப்பர் லாரியில் கிராவல் மண் அள்ளி வந்த மேல்மங்கலத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 29) என்பவரை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து தென்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.