கோபால்பட்டி:
சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 36). கூலித்தொழிலாளி. இவர் நேற்று திண்டுக்கல்லில் இருந்து அஞ்சுகுளிப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நத்தம் சாலையில் கொசவப்பட்டி என்ற இடத்தில் அவர் வந்தபோது, தனக்கு முன்னால் சென்ற தனியார் பஸ்சை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது அந்த பஸ் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.