சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் S8 சீரிஸ் மற்றும் கேலக்ஸி நோட் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த ஆண்டு ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதை தொடர்ந்து 2018 சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனின் கைரேகை ஸ்கேனர் டிஸ்ப்ளேவினுள் வழங்கப்படும் என தகவல்கள் வெளியானது.
2018 சாம்சங் ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், சாம்சங் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் எகைசனோஸ் சிப்செட்டை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன்களில் புதிய எக்சைனோஸ் 9810 சிப்செட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய பிராசஸர்களை விட மேம்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸ் மற்றும் ஜிகாபிட் எல்டிஇ மோடெம் உள்ளிட்டவற்றுடன் புதிய பிராசஸர் உருவாக்கப்பட்டுள்ளது. 6CA தொழில்நுட்ப திறன் கொண்ட புதிய எகைசோஸ் சிப்செட் என்பதோடு, இந்த திறன் பெற்ற சந்தையின் முதல் சிப்செட் என்ற பெருமையை பெற்றுள்ளது.
சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9810 பிராசஸர் இரண்டாம் தலைமுறை 10nm FinFET பிராசஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட மோடெம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்களுக்கு இணையானது என்றும் இது கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் சாம்சங்கை விட திறனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.