சாம்சஙங் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி சிறப்பு சலுகையாக கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.4000 வரை குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்கும் போது கூடுதலாக ரூ.4000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
தற்சமயம் வரை சாம்சங் தளத்தில் விலை குறைப்பு இதுவரை அப்டேட் செய்யப்படவில்லை. கேலக்ஸி S8 பிளஸ் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாடலின் விலை ரூ.1,000 வரை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.64,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் எச்.டி.எஃப்.சி. வங்கி கார்டுகளை கொண்டு வாங்கும் போது ரூ.4000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, 2.3 ஜிகாஹெர்ட்ஸ் 64-பிட் எக்சைனோஸ் 8895 ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், எல்கெட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் டூயல் சிம் சப்போர்ட், 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, வைபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், கைரேகை ஸ்கேனர், பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டண்ட், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, 3500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவங்கியுள்ள நிலையில், செப்டம்பர் 21-ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது.