செய்திகள்

கீக்பென்ச் தளத்தில் லீக் ஆன கேலக்ஸி S8 ஆக்டிவ்: முழு சிறப்பம்சங்கள்

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி S8 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கு முன் கீக்பென்ச் தளத்தின் மூலம் கசிந்துள்ளது. இதில் கேலக்ஸி S8 ஆக்டிவ் முக்கிய சிறப்பம்சங்கள் கசிந்துள்ளது.

பீஜிங்:

சாம்சங் சமீபத்தில் வெளியிட்ட கேலக்ஸி S8 மற்றும் கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போனின் ரக்கட் மாடலை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கீக்பென்ச் தளத்தில் SM-G892A என்ற மாடல் பெயரில் வெளியாகியுள்ள கேலக்ஸி S8 ஆக்டிவ் ஸ்மார்ட்போனில் ஏற்கனவே வெளியிடப்பட்ட S8 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. 

இன்டெர்னல் மெமரி, பிராசஸர், மற்றும் கேமரா உள்ளிட்டவை கேலக்ஸி S8-இல் வழங்கப்பட்டதை போன்றும் குவால்காம் ஸ்னப்டிரகான் 835 ஆர்டா கோர் பிராசஸர், அட்ரினோ 540 கிராஃபிக்ஸ் என்ஜின், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம், 12 எம்பி பிரைமரி கேமராஸ எச்டிஆர், ஆட்டோஃபோகஸ், 7 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும்.   

கேலக்ஸி S8 சீரிஸ் போன்களை விட கேலக்ஸி A8 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் சிறியதாக இருக்கும் என்றும், இதில் 5.4 இன்ச் 2008x1080 பிக்சல் டிஸ்ப்ளே, P68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் அமெரிக்க மிலிட்டரி-கிரேடு MIL-STD-810G ஸ்டாண்டர்டு வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

இத்தனை சிறப்பம்சங்களுடன் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர பேட்டரி திறன் சார்ந்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும் இந்த ஸ்மார்ட்போனில் முந்தைய மாடல்களை விட பெரிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.