செய்திகள்

வெளியீட்டிற்கு முன் 2.5 லட்சம் பேர் முன்பதிவு செய்த ஸ்மார்ட்போன்

இந்தியாவில் செப்டம்பர் 12-ம் தேதி வெளியிடப்பட இருக்கும் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை வாங்க இதுவரை 2.5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 12-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. எனினும் வெளியீட்டிற்கு முன் கேலக்ஸி நோட் 8 இந்தியாவில் முன்பதிவு துவங்கியது. இந்நிலையில், கேலக்ஸி நோட் 8 வாங்க இதுவரை 2.5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

ஆகஸ்டு 24-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி நோட் 8 சாம்சங் இந்தியா வலைத்தளத்தில் தொடர்ந்து முன்பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவு துவங்கிய 13 நாட்களில் இதுவரை சுமார் 3,95,000 பேர் கேலக்ஸி நோட் 8 வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.

மேலும் அமேசான் இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் முன்பதிவு செய்த 1.5 லட்சம் பேரில் சுமார் 72,000 பேர் அறிவிப்பு வெளியான முதல் நாளில் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் தளம் மட்டுமின்றி சாம்சங் இந்தியா தளம் மூலமாக ஒரு லட்சம் பேர் கேலக்ஸி நோட் 8 வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்:

- 6.3 இன்ச் குவாட் எச்டி+AMOLED டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
- சாம்சங் எக்சைனோஸ் ஆக்டா கோர் சிப்செட் (சில சந்தைகளில் மட்டும்)
- 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ப்ளூடூத் 5.0, எல்டிஇ
- 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா அமைப்பு
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- 3300 எம்ஏஎச் பேட்டரி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்

சர்வதேச சந்தையில் ஆப்பிள் 2017 ஐபோன் வெளியிடப்பட இருக்கும் தினத்தில் புதிய கேலக்ஸி நோட் 8 வெளியிடப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் நோட் 8 ஸ்மார்ட்போனிற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு ஐபோன் 7 பிளஸ் கேமராவிற்கு போட்டியாக இருக்கிறது.