சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது ஜெ7 சீரிஸ் ஸ்மார்ட்போனினை 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் கேலக்ஸி ஜெ7 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
புதிய 3ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனில் இன்டெர்னல் மெமரி மட்டுமின்றி புதிய ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் மற்றும் சாம்சங் பே மினி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5.5 இன்ச் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர், ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஜெ7 Nxt சிறப்பம்சங்கள்:
- 5.5 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
- மாலி T830 GPU
- 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
- 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.7 அப்ரேச்சர்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்ஏஎச் பேட்டரி