தாக்குதல் 
செய்திகள்

சாம்பவர்வடகரையில் மது குடிப்பதில் நண்பர்களிடையே மோதல்

சாம்பவர்வடகரையில் மது குடிப்பதில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

சாம்பவர்வடகரை:

சாம்பவர்வடகரை கீழூரை சேர்ந்தவர்கள் ஜெயராமன் (வயது 45), கருப்பசாமி (54), முருகன் (47), ராமசாமி (46) நண்பர்கள். இவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம். இதே போன்று நேற்று இரவு சாம்பவர்வடகரை தோப்பில் மது குடித்து கொண்டிருந்தனர்.

அப்போது மதுபாட்டிலை பங்கு வைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்தவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஜெயராம் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து புகாரின் பேரில் சாம்பவர்வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி வழக்கு பதிவு செய்து முருகன், ராமசாமி ஆகிய இருவரையும் கைது செய்தார்.