செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகிறார் சமரவீரா

இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் சமரவீரா, அந்நாட்டு கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கிறார்.

இவரை இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக நாளை இலங்கை வருகிறார். இதை இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்கா சுமதிபாலா உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை அணி விரைவில் இந்தியா வந்து தலா மூன்று டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரின்போது பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றுவார்.

SCROLL FOR NEXT