செய்திகள்

வங்காளதேச அணியின் பேட்டிங் ஆலோசகரான சமரவீராவின் பதவிக்காலம் நீட்டிப்பு இல்லை

வங்காள தேச கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக இருந்து வந்த திலன் சமரவீராவின் பதவிக் காலம் நீ்ட்டிக்கப்படவில்லை.

மாலை மலர்

வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியில் வங்காள தேசம் அணியும் ஒன்று. சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய அந்த அணி, இந்தியாவிடம் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.

அந்த அணியின் பேட்டிங் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலன் சமரவீரா செயல்பட்டு வந்தார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை அவரது பதவி நீட்டிக்கப்பட்டிருந்தது.

தற்போது, அவரது பதவிக்காலம் முடிவடைந்ததால் ஆலோசகராக செயல்படமாட்டார் என்று வங்காள தேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. சமரவீராவிற்குப் பதிலாக புதிய ஆலோசகரை அந்த அணி தேடிவருகிறது.