செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சமரவீரா நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேனான திலன் சமரவீரா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாலை மலர்

கொழும்பு:

இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேனான திலன் சமரவீரா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் திலங்கா சுமதிபாலா உறுதி செய்துள்ளார்.

இந்திய சுற்றுப்பயணத்துக்கான இலங்கை அணியினருடன் சமரவீரா இணைந்து தனது பணியை தொடங்க உள்ளார். 41 வயதான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான திலன் சமரவீரா 81 டெஸ்ட் போட்டியில் ஆடி 5,462 ரன்கள் எடுத்துள்ளார்.