செய்திகள்

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி பெண் வேட்பாளர் போட்டி

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக ஷாலினி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். #Loksabhaelections2019 #PMModi #ShaliniYadav

பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு வருகிற 26-ந்தேதி மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ் வாடியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இதில் வாரணாசி தொகுதியில், சமாஜ்வாடி போட்டியிடுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக ஷாலினி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.