கோவை:
தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் கோவை மாநகர் மாவட்டம், அனைத்து கிளை சங்க நிர்வாகிகள், பிரதிநிதிகள் அடங்கிய புதிய நிர்வாகிகள் தேர்தல் பேரவைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ராஜா, அமைப்பு செயலாளர் தனபால், தணிக்கை குழு தலைவர் குப்புசாமி, ராமசாமி, விமல் வேலுசாமி, ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகர் மாவட்ட செயலாளர் மகேந்திரன் வரவேற்றார். மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தலை மாநில பொதுச் செயலாளர் திருப்பூர் செல்வராஜ் நடத்தி வைத்தார்.
கூட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட தலைவராக ராமசாமி, செயலாளராக மகேந்திரன், பொருளாளராக விமல் வேலுசாமி, அமைப்பு செயலாளராக நடராசன், கொள்கை பரப்பு செயலாளராக ராமசாமி, ஆலோசகராக குப்புசாமி, துணைத் தலைவர்களாக ஆறுமுகம், கோபால், கதிரவன், துணை செயலாளராக வேல் முருகன், லோகநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் சவரக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சாதாரண கடைகளில் கட்டிங், சேவிங், ஹேர்டைக்கு ரூ.300, கட்டிங்-120, சிறுவர், சிறுமிகளுக்கு- 100, சேவிங்-80, சேவிங் சைடு ஒதுக்க-100, தாடி ஒதுக்குதல், டிரிம்மிங்-80-ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் ஏ.சி. கடைகளில் கட்டிங், சேவிங், ஹேர்டைக்கு ரூ.350, கட்டிங் மட்டும்-150, சிறுவர், சிறுமியர்-120, சேவிங் மட்டும்-100 , சேவிங் சைடு ஒதுக்க-120, தாடி ஒதுக்குதல், டிரிம்மிங்-100-காவும் உயர்த்தப்பட்டுள்ளது.