திருப்பூர்:
திருப்பூர் காங்கேயம் ரோடு நாச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 45).இவர் தெற்கு தோட்டத்தில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் கடந்த சில நாட்களாக சோகமாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். அதனால் அவருடைய வீட்டினர் பல கோவில்களுக்கு அவரை அழைத்துச்சென்றுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை திருப்பூர் ஊத்துக்குளி ரோடு குளத்துப்பாளையம் குளக்கரையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆறுமுகம் பிணமாக கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஆறுமுகம் மனம் உடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.