செய்திகள்

டாக்கா பிரிமீயர் லீக்கில் விளையாட சல்மான் பட்டுக்கு அனுமதி

வங்காள தேசத்தில் நடைபெறும் டாக்கா பிரிமீயர் லீக் தொடரில் விளையாட சல்மான் பட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. #SalmanButt

மாலை மலர்

தடை முடிந்து பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறது வேகப்பந்து வீச்சாளர் மொகமது அமிர் மீண்டும் சர்வதேச அணிக்கு திரும்பியுள்ளார். ஆனால் சல்மான் பட் மற்றும் மொகமது ஆசிப் ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர். இதில் சல்மான் பட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

தற்போது வங்காள தேசத்தில் 50 ஓவர் போட்டியாக நடத்தப்படும் டாக்கா பிரிமீயர் லீக் தொடர் நேற்று தொடங்கியது. மார்ச் 20-ந்தேதி வரை நடக்கும் இந்த தொடரில் மொகமேதான் ஸ்போர்ட்டிங் கிளப்பும் பங்கேற்று விளையாடி வருகிறது.