சேலம்:
சேலம் அருகே உள்ள காரிப்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவரும், அதே கல்லூரியில் படிக்கும் 19 வயதுடைய மாணவன் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் அவரை உறவினர் வீட்டில் தங்க வைத்தனர். இந்த நிலையில் அந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார்.
இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் அம்மாபேட்டை மகளிர் போலீசில், தனது மகளை அந்த மாணவன் கடத்தி சென்று விட்டதாக புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தி சென்ற மாணவனை தேடி வருகின்றனர்.