செய்திகள்

சேலம் என்கவுண்டர் எதிரொலி - ரவுடிகள் கலக்கம்

சேலம் அருகே பிரபல ரவுடி கதிர்வேலு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்த அப்பகுதி ரவுடிகள் தங்களுக்கும் இதே நிலை வந்துவிடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர். #SalemRowdy #EncounterKillings

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி, கன்னங்குறிச்சி, அஸ்தம்பட்டி, சூரமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ரவுடிகள் உள்ளனர்.

இவர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி, தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரவுடிகள் கொட்டத்தை கட்டுப்படுத்த அவ்வப்போது போலீசார் ரவுடிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைத்து வருகின்றனர். ஆனாலும் ரவுடிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை சேலம் அருகே பிரபல ரவுடி கதிர்வேலு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையறிந்த சேலத்தை சேர்ந்த ரவுடிகள் தங்களுக்கும் இதே நிலை வந்துவிடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.

இதனால் அவர்கள் சேலத்தை விட்டு வேறு பகுதிகளுக்கு இடம் பெயர தொடங்கி உள்ளனர்.  #SalemRowdy #EncounterKillings

SCROLL FOR NEXT