செய்திகள்

சர்வதேச டென்னிஸ் போட்டி- கால்இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி அடைந்து வெளியேறினார். #VenusWilliams

மாலை மலர்

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் சிலிகான் வாலி கிளாசிக் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), உலக தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ள மரியா சக்காரியை (கிரீஸ்) எதிர்கொண்டார்.