இலங்கையில் உள்ள ஊவா மாகாணத்தில் மந்திரியாக இருப்பவர் செந்தில் தொண்டைமான். இவருடைய பூர்வீகம் நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஆகும். இவருடைய பெற்றோர் பாளையங்கோட்டை மகாராஜ நகரில் வசித்து வருகிறார்கள்.
நாகர்கோவிலில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக செந்தில் தொண்டைமான், தனது மனைவியுடன் பாளையங்கோட்டைக்கு வந்து தனது வீட்டில் தங்கியிருந்தார். அவரை நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய அரசின் சார்பில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தை நான் வரவேற்கிறேன். இலங்கை தமிழர்கள் தற்போது பழைய நிலையில் இருந்து இயல்பு நிலைக்கு மாறி வருகிறார்கள். இந்த வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்பட்டு உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவருடைய சொந்த விருப்பம். மலேசிய அரசு வைகோவை திருப்பி அனுப்பியது எனக்கு வருத்தம் அளிக்கிறது.