பிரதமர் மோடி 
செய்திகள்

நெருக்கடி நிலை காலத்தில் ஜனநாயகத்திற்காக போராடியவர்களின் தியாகத்தை நாடு மறக்காது -மோடி

நெருக்கடி நிலை காலத்தில் ஜனநாயகத்திற்காக போராடியவர்களின் தியாகத்தை நாடு மறக்காது என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்தியாவில் 45 ஆண்டுகளுக்கு முன் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் பிரதமர் மோடி டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், ‘45 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இந்தியாவின் ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்காக போராடிய மற்றும் சித்ரவதைகளை எதிர்கொண்ட மக்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்தை ஒருபோதும் நாடு மறக்காது’ என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.