செய்திகள்

சபரிமலை தீர்ப்பு - கேரள முதல்வரின் ஆலோசனை கூட்டத்தை நிராகரித்த பந்தளம் அரண்மனை பிரதிநிதிகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு செய்ய அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதியளித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தை பந்தளம் அரண்மனை பிரதிநிதிகள் நிராகரித்தனர். #PinarayiVijayan

10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாக ஐயப்பன் கோயிலுக்கு ஆபரணங்களை அளித்துவரும் பந்தளம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.