சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி, 4 இளம்பெண்கள் கேரள ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். ரேஷ்மா நிஷாந்த், ஷனிலா சஜீஷ், தான்யா, எம்.சூர்யா என்ற அந்த 4 பேரும் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
அவர்கள் தங்கள் மனுவில், “நாங்கள் தீவிர ஐயப்ப பக்தர்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து நாங்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து வருகிறோம். ஆனால், அரசியல் கட்சியினரின் எதிர்ப்பால், நாங்கள் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. எனவே, அனைத்து வயது பெண்களும் வழிபட வசதியாக பிரத்யேகமாக 2 அல்லது 3 நாள் ஒதுக்கலாம். அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் அளிக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.