கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள சபாங் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிதா ராணி புனியா முன்னிலை பெற்று வந்தார்.
இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன்னதாக 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட ரிடா மோண்டல் இரண்டாம் இடமும், பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட அந்தாரியா பட்டாச்சாரியா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
கடந்த பொதுத்தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியானது தற்போது நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.