செய்திகள்

சிரியாவில் ரஷிய போர் விமானம் தரையில் மோதிய விபத்தில் விமானிகள் பலி

சிரியா நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்திவரும் ரஷிய நாட்டு போர் விமானம் இன்று தரையில் மோதிய விபத்தில் விமானிகள் பலியாகினர்.

மாலை மலர்

மாஸ்கோ:

சிரியா நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் கடைசி நகரமான  மயாடீன் நகரை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக ரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்துகின்றது.

இந்நிலையில், சிரியாவின் ஹ்மெய்மிம் நகரில் உள்ள ரஷிய விமானப்படை தளத்தில்  இருந்து இன்று தாக்குதல் நடத்த புறப்பட்டு சென்ற சுகோய்-24 ரக விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடுபாதையை விட்டு தாறுமாறாக ஓடி தரையில் மோதி நொறுங்கி தீக்கிரையானது.

இந்த விபத்தில் இரு விமானிகள் உயிரிழந்ததாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.