ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் 
செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றபடியே அலுவலக பணியாற்றும் ரஷிய பிரதமர்

ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றபடியே அலுவலக பணிகளை செய்து வருவதாக அவருடைய செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டினுக்கு கடந்த 30-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பெற்றபடியே அலுவலக பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து அவருடைய செய்தித்தொடர்பாளர் போரிஸ் பெல்யகோவ், “பிரதமர் மிக்கைல், டாக்டர்களின் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். உடல்நிலை சீராக இருப்பதாக அவர் உணர்கிறார். ஆவணங்கள் பார்க்கிறார். அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பில் இருக்கிறார்” என்று கூறினார்.