செய்திகள்

சிரியாவில் 32 பேருடன் சென்ற ரஷிய சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியது

சிரியாவில் உள்ள விமானத்தளத்திற்கு உபகரணங்கள் கொண்டு சென்ற ரஷ்ய சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிரியா:

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுபோரில் அதிபருக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் சண்டையிட்டு வருகிறது. இந்நிலையில், சிரியாவில் உள்ள ஹேமிமிம் விமானப்படை தளத்திற்கு ராணுவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு 32 பேருடன் ரஷ்ய சரக்கு விமானம் சென்று கொண்டிருந்தது.

எஞ்சின் கோளாறு காரனமாக சிரியாவின் கடற்கரை பகுதியான லதிகியா அருகே விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 32 பேரும் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ரஷ்யா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT