செய்திகள்

ஆர்ட்டிக் கடலில் 8 பேருடன் விழுந்த ரஷ்ய ஹெலிகாப்டர்: தேடுதல் பணி தீவிரம்

நார்வேயிலிருந்து 8 பேருடன் புறப்பட்ட ரஷ்ய ஹெலிகாப்டர் ஆர்ட்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து இரண்டாவது நாளாக இன்றும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

மாலை மலர்

ஆஸ்லோ:

ரஷ்யாவைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று நார்வேயிலிருந்து நேற்று புறப்பட்டுச் சென்ற போது திடீரென பழுது ஏற்பட்டு ஆர்ட்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் 8 பேர் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடலில் விழுந்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டிருந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. இருப்பினும், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை கண்டறிய முடியவில்லை. இதனால், 8 பேரும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.