கொரோனா தடுப்பூசி பரிசோதனை - கோப்புப்படம் 
செய்திகள்

ரஷியாவில் இந்த மாதம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்குகிறது

ரஷியாவில் இந்த மாதம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்கும் என ரஷிய தொழில், வர்த்தக மந்திரி டெனிஸ் மாண்டுரோவ் தெரிவித்தார்.

மாலை மலர்

உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து பரிசோதனைகள் முடித்து சந்தைக்கு கொண்டு வருவதில் பல நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

அந்த வகையில் ரஷியாவில் உள்ள பிரபல மருந்து நிறுவனங்களான பயோகாட் மற்றும் ஜெனிரியம் ஆகியவை கூட்டாக தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன.

இந்த தடுப்பூசிகளை பரிசோதிப்பது இந்த மாதம் தொடங்கி விடும்.