செய்திகள்

பால்டிக் கடல் பகுதியில் பரபரப்பு: அமெரிக்க விமானத்தை விரட்டியடித்த ரஷிய போர் விமானம்

ரஷ்யா நாட்டின் ஓரமுள்ள பால்டிக் கடல் பகுதியில் இன்று முன் அனுமதி இல்லாமல் பறந்த அமெரிக்க விமானத்தை ரஷியப் போர் விமானம் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

ரஷ்யா நாட்டின் பால்டிக் கடலை ஒட்டியுள்ள வான் எல்லைப் பகுதியில் ஒரு மர்ம விமானம் பறப்பதை (உள்ளூர் நேரப்படி) இன்று காலை பத்து மணியளவில் ரஷியாவின் உளவு ரேடார்கள் கண்டுபிடித்தன.

இதையடுத்து, பால்டிக் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ரஷிய கடற்படை கப்பலில் இருந்து புறப்பட்ட அதிநவீன சுகோய்-27 ரக போர் விமானம் அந்த மர்ம விமானத்தை விரட்டிச் சென்றது. அருகில் சென்று பார்த்தபோது அத்துமீறி பறந்த விமானம் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான பி-52 ரக போர் விமானம் என்பது தெரியவந்தது.


கோப்பு படம்