ஏடிஎம் மையம் 
செய்திகள்

கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை

சென்னை மதுரவாயல் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ரூ.13 லட்சம் பணம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை:

சென்னை மதுரவாயல் பகுதியில் தனியார் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது.  இந்நிலையில்  ஏடிஎம் மையத்தில் கிருமி நாசினி தெளிப்பதாக கூறி  உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.13 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி ஏடிஎம் இயந்திரத்தை திறந்து  ரூ.13 லட்சம் பணத்தை திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மதுரவாயல் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதன கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

SCROLL FOR NEXT