செய்திகள்

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்தது - டாலருக்கு நிகரான மதிப்பு 72.91 ஆனது

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று மேலும் 22 காசுகள் சரிந்து, வரலாற்றில் இல்லாத அளவிற்கு 72.91 என்ற நிலைக்கு சென்றது. #IndianRupee #RupeeValue

சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் 72.74 என்ற அளவில் சரிந்தது.  அதன்பின்னர் சற்று ஏற்றம் பெற்று நேற்றைய வர்த்தக முடிவில் 72.69 என்ற நிலையில் இருந்தது.

இந்நிலையில், ரூபாய் மதிப்பு இன்று காலை வர்த்தகத்தில் மீண்டும் சரியத் தொடங்கியது. காலை 10 மணி நிலவரப்படி 22 காசுகள் சரிந்து 72.91 என்ற நிலையை எட்டியது. இதன்மூலம் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது.

SCROLL FOR NEXT