சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்களான வக்கீல் கதிரேசன், முன்னாள் கவுன்சிலரான முத்துக்குட்டி ஆகியோர் சங்கரன்கோவில் போலீசில் ஒரு புகார் அளித்தனர். அந்த புகாரில், தி.மு.க. பிரமுகரான ராஜதுரை என்பவர் சமூக வலைத்தளத்தில் முதல்- அமைச்சர் பற்றியும், ஐகோர்ட் நீதிபதி குறித்தும் அவதூறான கருத்துக்களை பரப்பி வந்துள்ளார்.
இதைப்பார்த்த நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய சங்கரன்கோவில் போலீசார் தி.மு.க. பிரமுகர் ராஜதுரை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.